மத்திய அரசின் மனமாற்றத்துக்கு யார் காரணம் தெரியுமா?: தமிழிசை!

கோவை(11 ஜன 2017): பொங்கல் விடுமுறையை கட்டாய விடுமுறையாக அறிவிக்க தமிழக பா.ஜ.கவே காரணம் என்று தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.

கோவையில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழக பாஜகவினர் கொடுத்த அழுத்தம் காரணமாகவே மத்திய அரசு பொங்கல் பண்டிகையை விருப்ப முறையில் இருந்து பொது விடுமுறையாக அறிவித்துள்ளது. இதன் மூலமாகத் தமிழர்கள் உதாசீனப்படுத்தப்படவோ அல்லது புறக்கணிக்கப்படவோ இல்லை என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது..

தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவித்தால் மட்டும் போதாது. விவசாயிகளின் அடிப்படைத் தேவைகளை அறிந்து ஆறுகளைத் தூர்வாரி, மணல் அள்ளுவதைத் தடுக்க வேண்டும். மேலும், விவசாயிகளுக்கான காப்பீட்டுத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும்” என்றார்.

Tamil nadu BJP leaders propose to Central government for compulsory pongal holiday: said Thamizisai soundarajan