தலித் பெண் கொலை வழக்கில் தூக்கு: திருமாவளவன் கருத்து!

Wednesday, 11 January 2017 12:09 Published in தமிழகம்

சென்னை(11 ஜன 2017): தலித் பெண் கொலை வழக்கில் தம்பதியினருக்கு வழங்கப்பட்ட தூக்குத் தண்டனை குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் இதுகுறித்து அவர் தெரிவிக்கயில், “மரண தண்டனைக்கு எதிரான இயக்கம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி. மரண தண்டனை வழங்க கூடாது,இந்திய அரசு அந்த கொள்கையை ஏற்க கூடாது என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்,போராடி வருகிறோம்.

ஆனால் திருநெல்வேலி செசன்ஸ் நீதிமன்றத்தில் நடந்த ஆணவ கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு கடும் தண்டனையான தூக்கு தண்டனை வழங்கப்பட்டிருப்பதாக தெரியவருகிறது. இந்த சாதிய ஆணவ கொலை தொடர்பான வழக்கில் செசன்ஸ் நீதிபதி அப்துல் காதர் அவர்கள் அதனை தொடர்புடைய குற்றவாளிகளை தூக்கிலிட வேண்டும் என்று தீர்ப்பு அளித்திருப்பது இங்கு காலம்காலமாக தொடர்கின்ற சாதிய ஆணவ கொலைகளை ஒரு கட்டுக்குள் கொண்டுவர வேண்டும், அதற்கு ஒரு முற்றுபுள்ளி வைத்தாக வேண்டும் என்கிற அடிப்படையில் வழங்கப்பட்ட தீர்ப்பாக நான் பார்க்கிறேன்.

அதிலும் குறிப்பாக எட்டே மாதங்களில் விசாரிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டிருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. பெரும்பாலான வழக்குகள் ஆண்டு கணக்கிலே கிடப்பிலே போடப்பட்டு விசாரணைகள் தள்ளி வைக்கப்படுவது வழக்கம். ஆனால் இந்த வழக்கில் எட்டு மாதங்களில் விசாரித்து தீர்ப்பு அளிக்கபட்டிருப்பது ஒரு புரட்சிகரமான நடவடிக்கையாக நான் பார்க்கிறேன்." என்றார்.

Thirumavalavan comment about death sentence for Dalit women murder case

Last modified on Wednesday, 11 January 2017 12:12
Add comment
Inneram.com moderator has right to block inappropriate comments. Please comment responsibly.