ஜல்லிக்கட்டு போராட்டம்: மாணவர்கள் மீது காவல்துறை தாக்குதல்!

Wednesday, 11 January 2017 12:34 Published in தமிழகம்

மதுரை(11 ஜன 2017): மதுரையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் காவல்துறையினர் தடியடி நடத்தியுள்ளனர்.

ஜல்லிக்கட்டை நடத்த வலியுறுத்தி தமிழகமெங்கும் போராட்டம் வெடித்துள்ளது. கடந்த ஞாயிறன்று சென்னையில் மாணவர்கள் மாபெரும் பேரணி நடத்தி ஆச்சர்யப்படுத்தினர்.

இந்நிலையில் மதுரையில் ஜல்லிக்கட்டுக்காக போராட்டம் நடத்தியபோது மாணவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர். தடுப்புகளை உடைத்துக் கொண்டு மாணவர்கள் சென்றதால் மாணவர்கள் மீது தடியடி நடத்தியதாக கூறப்படுகிறது.

In Madurai police attack on Students on protest for support Jallikkattu

Last modified on Wednesday, 11 January 2017 12:39
Add comment
Inneram.com moderator has right to block inappropriate comments. Please comment responsibly.