களத்துக்கு வாங்க தம்பி: சிம்புவை அழைக்கும் மாணவர்கள்!

Wednesday, 11 January 2017 15:15 Published in தமிழகம்

சென்னை(11 ஜன 2017): மதுரையில் மாணவர்கள் மீது காவல்துறை நடத்திய தடியடியை என்னால் ஏற்க முடியாது என்று நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார்.

ஜல்லிக்கடடுக்கு ஆதரவாக மதுரையில் மாணவர்கள் பெரும் போராட்டம் ஒன்றை நடத்தினர். அதில் மாணவர்கள் தடுப்புகளை மீறியதால் காவல்துறை அவர்கள் மீது தடியடி நடத்தியது. இதனால் மாணவர்களுக்கும், காவல்துறையினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இந்நிலையில் மாணவர்கள் மீது காவல்துறை நடத்திய தடியடியை கண்டித்து நடிகர் சிம்பு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும். நான் உங்களுடன் இருக்கிறேன் என்று மாணவர்களுக்கு அறிவிப்பதுபோல் அதில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மாணவர்கள் சிம்பு அவர்களே உங்கள் ஆதரவிற்கு நன்றி, அதேவேளை பதிவு மட்டும் போடாமல் எங்களது போராட்டத்தின்போது களத்தில் வந்து நீங்களும் போராடுங்கள் என்று அழைப்பு விடுத்துள்ளனர்.

Students invite Actor Simbu to protest and support for Jallikkattu.

Last modified on Wednesday, 11 January 2017 15:04
Add comment
Inneram.com moderator has right to block inappropriate comments. Please comment responsibly.