முத்தலாக் சான்றிதழ் வழங்க இடைக்கால தடை!

Wednesday, 11 January 2017 20:17 Published in தமிழகம்

சென்னை(11 ஜன 2017): தமிழகம் முழுவதும் உள்ள காஜிகள் தலாக் சான்றிதழ் வழங்க இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பதர் சயீத் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை அளித்திருந்தார். அதில், இஸ்லாமிய தனி சட்டப்படி ஆண் மூன்று முறை “தலாக்” என்று கூறினால் விவாகரத்து செய்ய பட்டதாக ஏற்று கொள்ள படுகிறது. மற்ற மதத்தை ஒப்பிடும்போது இஸ்லாமிய பெண்கள் இதனால் பெரிதும் பாதிக்கபடுகிறார்கள். அதே போல ஹாஜிக்களுக்கு தலாக் சான்றுதழ் வழங்க எந்த விதமான அடிப்படை உரிமையும் இல்லை” என்று கூறியிருந்தார்

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு அளித்த மனு மீதான விசாரணை இன்று மீண்டும் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி எம்.எம். சுந்தரேசர் முன்பு விசாரணைக்கு வந்தது.

விசரணையின் முடிவில் "தமிழகம் முழுவதும் உள்ள ஹாஜிக்களுக்கள் வழங்கும் தலாக் சான்றிதழ் என்பது தனி பட்ட கருத்து தான். அந்த சான்றுதழிக்கு எந்த விதமான சட்ட அந்தஸ்தும் கிடையாது, அதன் மூலம் தம்பதிகளுக்கு விவாகரத்து வழங்கும் அதிகாரம் கிடையாது. நீதிமன்றத்தை அணுகி தான் விவாகரத்து பெற வேண்டும். இந்த வழக்கு விசாரணை முடியும் வரை தமிழகத்தில் உள்ள காஜிகள் தலாக் சான்றுதழ் வழங்க தடை விதிக்கப்படுகிறது. இந்த உத்தரவை தமிழகத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களுக்கு அனுப்ப தலைமை பதிவாளருக்கு உத்தரவு பிறப்பித்தனர்.

மேலும் இதுகுறித்த தலாக் குறித்த சில ஆவணங்களை சம்ர்பிக்கவும் தலாக் விவகாரத்தில் தலாக் சான்றுதழில் யார், எப்போது தலாக் சொன்னார்கள் என்பது போன்று தகவல் மட்டுமே இருக்கிறது. எந்த காரணத்திற்காக சொன்னார்கள், எந்த சூழலில் சொன்னார்கள் என்ற எந்த விவரமும் இல்லை அதை மாற்றி அமைக்க முஸ்லிம் சட்ட வாரியம் கால அவகாசம் கேட்டது, இதனை அடுத்து இந்த வழக்கு மறு விசாரணையை பிப்ரவரி 21 ஆம் தேதி நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

The Madras High Court passed an interim judgement annulling all the triple talaq (divorce) certificates issued by Chief Kazi, saying that he has no power to issue such documents as per section 4 of the Kazis Act, 1880

Last modified on Thursday, 12 January 2017 17:17
Add comment
Inneram.com moderator has right to block inappropriate comments. Please comment responsibly.