நானும் போராடப்போகிறேன்: நடிகர் சிம்பு அதிரடி அறிவிப்பு!

சென்னை(11 ஜன 2017): ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மவுனப் போராட்டம் நடத்தப்போவதாக நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கக் கோரி வியாழனன்று மாலை 5 மணிக்கு எனது வீட்டுக்கு அருகே மவுன போராட்டம் நடத்தவுள்ளேன்.

எதையும் பொறுத்துக்கொள்வதே தமிழர்களின் பலமும், பலவீனமும். தற்போது தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதே பிரச்சனையாகிவிட்டது. தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டில் கைவைக்கிறார்கள். ஏனென்று கேட்டால் பொங்கல் விடுமுறையே கிடையாது என்கிறார்கள். தமிழர்கள் எதற்காக போராடினாலும் தீர்வு கிடைப்பதில்லை." என்றார்.

முன்னதாக இன்று மதுரையில் நடைபெற்ற மாணவர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ட்விட்டரில் சிம்பு கருத்து தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Simbu announce protest for jallikkattu