பொங்கல் தமிழ் புத்தாண்டாக மாற்றப்படும்: ஸ்டாலின்!

Thursday, 12 January 2017 01:38 Published in தமிழகம்

காஞ்சிபுரம்(12 ஜன 2017): திமுக ஆட்சிக்கு வந்தால் பொங்கல் தமிழ் புத்தாண்டாக மாற்றப்படும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

குன்றத்துார் அருகே, தி.மு.க., சார்பில் நடைபெற்ற, சமத்துவ பொங்கல் விழாவில்,  ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது;

தமிழர் பண்பாட்டுக்கு எந்த பிரச்னை வந்தாலும், அதை பார்த்துக்கொண்டு, தி.மு.க., சும்மா இருக்காது. மத்திய அரசு, கட்டாய விடுமுறை பட்டியலில் பொங்கல் இல்லை என அறிவித்ததும், தி.மு.க., கண்டன அறிக்கை வெளியிட்டது. அதன் பிறகு தான் மற்ற கட்சிகள், தமிழ் அமைப்புகள் அறிக்கை வெளியிட்டன. தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வந்தால், தமிழர் திருநாள் தமிழ்ப்புத்தாண்டாக அறிவிக்கப்படும். விவசாயிகள் தொடர்ந்து உயிரிழந்து வருவது மன வருத்தம் அளிக்கிறது. மாநிலத்தில் ஆட்சி செய்யும் அரசு, இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

இந்த விழாவில் மு. க. ஸ்டாலின் குடும்பத்துடன் பங்கேற்று கோவூர் கிராம மக்களுடன் இணைந்து சமத்துவ பொங்கலிட்டு கொண்டாடினார்.

Stalin sasy If DMK become a rulling party the Pongal festival will be named as Tamil New Year

Last modified on Thursday, 12 January 2017 01:11
Add comment
Inneram.com moderator has right to block inappropriate comments. Please comment responsibly.