மோடியால் அதிமுக எம்.பிக்களுக்கு தொடரும் அவமானம்!

Thursday, 12 January 2017 02:48 Published in தமிழகம்

புதுடெல்லி(12 ஜன 2017): பிரதமரை சந்திக்கச் சென்று மீண்டும் அவமானப்பட்டு திரும்பியுள்ளனர் தமிழக அதிமுக எம்.பிக்கள்.

ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த ஏதுவாக மத்திய அரசு ஒரு அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டும் என்ற கோரிக்கையோடு அதிமுக எம்.பிக்கள் இன்று மோடியை சந்திக்க டெல்லி விரைந்தனர்.
இதுதொடர்பாக, அதிமுகவின் பொதுச் செயலாளர் சசிகலாவின் கோரிக்கை மனுவை மத்திய வன துறை மற்றும் சுற்றுசூழல் துறை இணை அமைச்சரிடம் அளித்துள்ளனர்

டெல்லி விரைந்த தம்பிதுரை தலைமையிலான அதிமுக எம்.பிக்கள் ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பான மனுவை கொடுக்க பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டுள்ளனர். ஆனால் பிரதமர் மோடி தமிழக எம்.பி.களை சந்திப்பதை தவிர்த்துவிட்டார். இதனால் ஏமாற்றமடைந்த , அதிமுக எம்.பிக்கள் என்ன செய்வது என தெரியாமல், எம்பிக்கள் பிரதமரின் அலுவலத்தில் அளித்தனர்.

ஏற்கனவே இதேபோன்று கடந்த அக்டோபர் மாதம், ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தபோது, மோடியை பார்த்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்த எம்.பிக்கள் அவரது அலுவலகம் சென்றனர். அப்போதும் பிரதமர் அதிமுக எம்.பிக்களை சந்திப்பதை தவிர்த்தார். இப்போது மீண்டும் அவமானப்படுத்தப்பட்டுள்ளனர்.

PM Modi refused to meet Tamilnadu AIADMK MPs in Delhi who try to meet him over Jallikattu issue.

Last modified on Thursday, 12 January 2017 01:50
Add comment
Inneram.com moderator has right to block inappropriate comments. Please comment responsibly.