வேணாம் வேணாம் நானே கழட்டிக்கிறேன்: எடப்பாடியின் அதிரடி!

சென்னை(20 ஏப் 2017): சிகப்பு சைரன் விளக்கு, சுழல் விளக்கு பயன்படுத்த மத்திய அரசு தடை விதித்துள்ளதை அடுத்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது காரில் பொருத்தப்ப்டட சுழல் விளக்கை இன்று, தானே அகற்றினார்.

பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை நேற்று எடுக்கப்பட்ட முடிவில் அவசர கால வாகனங்களை (ஆம்புலன்ஸ் உள்ளிட்டவை) தவிர்த்து பிற அனைத்து வாகனங்களிலும் சுழல் விளக்குகள், சைரன்கள் அகற்றப்படும். இந்த திட்டம் மே 1–ந்தேதி அமலுக்கு வருகிறது.விதியை மீறி யாரேனும் செயல்பட்டால், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக சம்மந்தப்பட்ட விதிமுறைகளுடன் முறையான அறிவிப்பு வெளியிடப்படும் போன்ற முடிவுகள் எடுக்கப்பட்டதாக மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.

இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது காரில் பொருத்தப்ப்டட சுழல் விளக்கை இன்று, தானே அகற்றினார். இன்னும் 10 நாட்கள் அவகாசம் உள்ள நிலையில் உதவியாளர்கள் இருந்தும் அதை பொருட்படுத்தாமல் இன்றே எடப்பாடி சைரன் விளக்கை கழட்டியுள்ளார்.