ஜெ.மரணம் குறித்து மோடியிடம் விசாரணை நடத்த வேண்டும்: தங்கத் தமிழ்ச்செல்வன்!

சென்னை(20 ஏப் 2017): ஜெயலலிதா மரணம் குறித்து மோடியிடமும், ஓ.பன்னீர் செல்வத்திடமும்தான் விசாரணை நடத்த வேண்டும் என்று எம்.எல்.ஏ தங்கத் தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் மேலும் தெரிவித்ததாவது:

முதல்வர் ஜெயலலிதாவுக்கு அப்பல்லோ மருத்துவமனை மருத்துவம் பார்த்தது. மேலும் மோடி கட்டுப்பாட்டில் உள்ள எய்ம்ஸ் டாக்டர்கள் மருத்துவம் பார்த்தனர்.

அப்படியானால் யாரையெல்லாம் விசாரணைக்கு கூப்பிடுவீர்கள். பிரதமர் மோடியை விசாரணைக்கு கூப்பிட வேண்டும், ஓ.பன்னீர்செல்வத்தை விசாரணைக்கு கூப்பிட வேண்டும், லண்டன் டாக்டர், சிங்கப்பூர் டாக்டர்களையெல்லாம் விசாரணைக்கு கூப்பிட வேண்டும்.

ஓ.பி.எஸ் முதல்வராக இருந்தபோது இல்லாத மர்மம் அவரது பதவி பறிபோன பின்பு இப்போது மர்மம் தெரிகிறதா? இது எந்த வகையில் நியாயமாக இருக்கும்" என்று தங்கத் தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.