பத்தாம் வகுப்பு தேர்வு மதிப்பெண் சான்றிதழ்கள் பெறுவது எப்படி?

Friday, 19 May 2017 10:51 Published in தமிழகம்

சென்னை(19 மே 2017): பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. இதில் 94.4 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை 10;0 மணிக்கு வெளியிடப்பட்டது. தமிழக ம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 10 லட்சத்து 38 ஆயிரத்து 22 மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில் 94.4 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தேர்வு முடிவுகளை http://www.dge1.tn.nic.in/ மற்றும் http://www.dge2.tn.nic.in/ ஆகிய இணையதளங்களில் பார்க்கலாம்.

இந்நிலையில் மாணவர்கள் தங்களது மதிப்பெண் சான்றிதழ்களை www.dge.tn.nic.in என்ற இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

மற்றும் தேர்வில் தோல்வி அடைந்தவர்கள் மற்றும் தேர்வு எழுதாதவர்களுக்கு வரும் ஜூன் இறுதியில் தேர்வு நடத்தப்படும.

Last modified on Friday, 19 May 2017 10:59
Add comment
Inneram.com moderator has right to block inappropriate comments. Please comment responsibly.