பத்தாம் வகுப்பு தேர்வில் முதலிடம் வெளியீடு!

சென்னை(19 மே 2017): பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. இதில் 94.4 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை 10;0 மணிக்கு வெளியிடப்பட்டது. தமிழக ம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 10 லட்சத்து 38 ஆயிரத்து 22 மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில் 94.4 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தேர்ச்சி விகிதத்தில் விருதுநகர் முதலிடம் பெற்றுள்ளது. முதல் மூன்று இடங்கள் பெறும் மாணவர்களின் பட்டியலை வெளியிடப்படமாட்டாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மாணவர்களுக்கு எஸ்.எம்.எஸ் மூலம் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.