வீடியோ:தமிழர்கள் கீழ்த்தரமாக நடந்துகொள்வதாக ரஜினி புகார்!

Friday, 19 May 2017 11:48 Published in தமிழகம்

சென்னை(19 மே 2017): தமிழர்கள் கிழ்த்தரமாக நடந்துகொள்வதாக நடிகர் ரஜினி தெரிவித்துள்ளார்.

சென்னை கோடம்பாக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களைச் சந்திக்கும் நிகழ்ச்சி கடந்த சில தினங்களாக நடைபெற்று வருகிறது. பல்வேறு ஊர்களில் இருந்து வரும் ரசிகர்களை அவர் சந்தித்து புகைப்படம் எடுத்து வந்தார். குறிப்பாக அவர் அரசியல் குறித்து பேசியது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இன்று கடைசி நாளாக ரசிகர்களைச் சந்தித்த ரஜினி, 'வேறு மாநிலத்தில் இருந்து வந்த என்னை தமிழனாக மாற்றியது நீங்கள்தான்' எனக் கூறினார். மேலும் அரசியல் குறித்து நான் அன்மையில் பேசியது பெரும் விவாதங்களையும் எதிர்ப்புகளையும் கிளப்பும் என எதிர்ப்பார்க்கவில்லை. ஆனால் அரசியலில் எதிர்ப்பு தான் மூலதனம்' என அவர் கூறியுள்ளார். 'சமூக வலைதளங்களில் தன்னை திட்டி எழுதுவதை பார்க்கும் பொழுது தமிழர்கள் ஏன் இவ்வளவு கீழ்த்தரமாக நடந்துக்கொள்கிறார்கள்' என்றார்.

வீடியோ

மேலும் அன்புமணி ராமதாஸ் நன்றாக படித்தவர். நல்ல விஷயம் தெரிந்தவர். புதுமையாக யோசிக்கக்கூடியவர், உலகம் பூரா சுத்தியிருக்கிறார். நல்ல கருத்துக்கள், நல்ல திட்டங்கள் வைத்திருக்கிறார். திருமாவளவன் தலித் மக்களுக்காக குரல் கொடுத்து உழைத்துக்கொண்டிருக்கிறார். சீமான் போராளி. சீமானின் கருத்துக்களை கேட்டு நான் பிரமிச்சிப்போயிருக்கேன். இந்த மாதிரி தேசிய கட்சிகள் இருக்கிறார்கள். ஆனால் சிஸ்டம் கெட்டுபோயிருக்கிறது. ஜனநாயகமே கெட்டுப்போயிருக்கிறது. அரசியல் பற்றி, ஜனநாயகம் பற்றி மக்களின் மனமே மாறியிருக்கிறது. எனவே சிஸ்டத்தை மாற்ற வேண்டும். மன ரீதியாக, சிந்தனையை மாற்ற வேண்டும். என்று ரஜினி பேசினார்.

 

Add comment
Inneram.com moderator has right to block inappropriate comments. Please comment responsibly.