பத்தாம் வகுப்பு தேர்வில் விருதுநகர் முதலிடம்!

Friday, 19 May 2017 12:20 Published in தமிழகம்

விருதுநகர்(19 மே 2017): பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 98.55% தேர்ச்சி பெற்று தமிழகத்தில் விருதுநகர் மாவட்டம் மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளது.

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 91.59 ஆக உள்ளது. மேலும் கடலூர் மாவட்டம் தேர்ச்சி விகிதத்தில் கடைசி இடம் பிடித்துள்ளது.

* தமிழ்நாட்டில் அதிகபட்சமாக விருதுநகர் மாவட்டத்தில் 97.85 சதவீதம்
பெற்று முதலிடத்தை பெற்றுள்ளது.
* கன்னியாகுமரி மாவட்டம் 2-வது இடம்- 98.17% தேர்ச்சி
* ராமநாதபுரம் மாவட்டம் 3-வது இடம்- 98.16% தேர்ச்சி
* ஈரோடு மாவட்டம் 4-வது இடம்- 97.97% தேர்ச்சி
* தூத்துக்குடி மாவட்டம் 5-வது இடம்- 97.16% தேர்ச்சி

பாட வாரியாக 100க்கு 100

* தமிழ் பாடத்தில் 69 பேர் 100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.
* கணக்கு பாடத்தில் 13759 பேர் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.
* அறிவியல் பாடத்தில் 17481 பேர் 100 மதிப்பெண் பெற்றுள்ளனர்
* சமூக அறிவியல் பாடத்தில் 61,115 மாணவர்கள் 100 மதிப்பெண் பெற்றனர்.
* ஆங்கிலப் பாடத்தில் யாரும் முழு மதிப்பெண் எடுக்கவில்லை.

தேர்வு முடிவுகளை http://www.tnresults.nic.in, http://www.dge1.tn.nic.in, http://www.dge2.tn.nic.in, kalvi.dinakaran.com ஆகிய இணையதளங்களில் அறிந்துகொள்ளலாம்.

Add comment
Inneram.com moderator has right to block inappropriate comments. Please comment responsibly.