ரஜினியை ஒருபோதும் தமிழர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்; சுப்பிரமணியன் சாமி!

Friday, 19 May 2017 18:57 Published in தமிழகம்

சென்னை(19 மே 2017): ரஜினி அரசியலுக்கு வந்தால் ஒருபோதும் தமிழர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று பா.ஜ.க.தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சாமி தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினி தனது ரசிகர்களை சந்தித்து, தனது அரசியல் பிரவேசம் பற்றி குறிப்பிடும் போது, வழக்கம்போல் “ இன்று நான் நடிகன். நாளை நான் யார் என்பதை கடவுள் முடிவு செய்வார்” என தனது டிரேட்மார்க் கருத்தை தெரிவித்தார். மேலும், நான் அரசியலுக்கு வந்தால் சிலரை பக்கத்தில் அண்ட விட மாட்டேன் என கூறியிருந்தார்.

ரஜினி குறித்து பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில் சுப்பிரமணியன் சாமி தெரிவிக்கையில், , ரஜினிகாந்த் இப்போது கறுப்பு சட்டை போட்டுக் கொண்டு அரசியல் பண்ண ஆரம்பித்துவிட்டார். கர்நாடகத்தில் பிறந்த மாராட்டியரான ரஜினியை மக்கள் எப்படி ஏற்றுக் கொள்வார்கள்?. ரஜினி ஒரு ஊழல் நடிகர். அவருக்கு அரசியல் அறிவு சிறிதும் கிடையாது. எனவே அரசியலுக்கு வரவோ, முதல்வராக அமரவோ சிறிதும் தகுதியில்லை." என்று தெரிவித்தார்.

Add comment
Inneram.com moderator has right to block inappropriate comments. Please comment responsibly.