இஃப்தார் விருந்தில் கலந்துகொள்ள தினகரனை அழைக்க மறுப்பு!

சென்னை(18 ஜூன் 2017): அதிமுக இஃப்தார் விருந்தில் கலந்துகொள்ள டி.டி.வி.தினகரனுக்கு அழைப்பு மறுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஆண்டு அரசு சார்பில் முதல்வர் எடப்பாடி தலைமையில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த விழாவை தினகரன் தலைமையில்தான் நடத்த வேண்டும் என்று அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து கோரிக்கை விடுத்தனர்.ஆனால், இந்த கோரிக்கையை எடப்பாடி பழனிச்சாமி நிராகரித்து விட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து, அதிமுக எம்பி அன்வர்ராஜா கூறும்போது, வருகிற 21ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நந்தம்பாக்கத்தில் இப்தார் விருந்து நடைபெறும். தினகரன் தலைமையில் நடைபெறாது. ஒவ்வொரு ஆண்டும் முதல்வர் தலைமையில்தான் இந்த விழா நடக்கும். அதேபோலத்தான் எடப்பாடி தலைமையில் விழா நடக்கிறது என்றார். இதன் மூலம் தினகரன் ஆதரவாளர்களின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. இதனால் அடுத்தகட்டமாக என்ன செய்வது என்பது குறித்து அவரது ஆதரவாளர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.