விவாசாயிகள் சந்திப்புக்குப் பின்பு ஒத்துக்கொண்ட ரஜினி!

Sunday, 18 June 2017 16:54 Published in தமிழகம்

சென்னை(18 ஜூன் 2017): நதிநீர் இணைப்புக்கு எப்போதோ அறிவித்த ரூ.1 கோடி ரூபாய் தொகையை இப்போது ஒத்துக்கொண்டுள்ளார் நடிகர் ரஜினி.

சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள ரஜினிகாந்தை வீட்டில் விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு சந்தித்துப் பேசினார்.

அப்போது அய்யாக்கண்ணு, நடிகர் ரஜினிகாந்த் பிரதமரிடம் பேசி நதிகளை இணைக்க வலியுறுத்த வேண்டும் என்றார்.

ரஜினியை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அய்யாக்கண்ணு, நதிகள் இணைப்பிற்காக ஒரு கோடி ரூபாயை பிரதமரிடம் வழங்க வேண்டும் என்று ரஜினியிடம் கோரிக்கை வைத்ததாக குறிப்பிட்டார். இதற்கு பதிலளித்த ரஜினி தாம் அந்தப் பணத்தை தர தயாராக உள்ளதாகவும், மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா, தென்பெண்ணை, பாலாறு, காவிரியை இணைக்க வேண்டும் என்று கூறியதாக அய்யாக்கண்ணு தெரிவித்தார்.

 

Add comment
Inneram.com moderator has right to block inappropriate comments. Please comment responsibly.