ரஜினி என்ற சிங்கம் சிங்கிலா வரும்: இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்!

Monday, 19 June 2017 14:17 Published in தமிழகம்

சென்னை(19 ஜூன் 2017): நடிகர் ரஜினியை இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் சந்தித்துப் பேசினார்.

இன்று போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தில், சந்தித்த அர்ஜுன் சம்பத் ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அர்ஜூன் சம்பத்துடன் இந்து மக்கள் கட்சி மாநில பொதுச் செயலாளர் இராம.இரவிக்குமார், இளைஞரணி மாநில பொதுச் செயலாளர், குருமூர்த்தி உள்ளிட்டோர் ரஜினியைச் சந்தித்தனர்.

பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அர்ஜுன் சம்பத் ரஜினி என்ற சிங்கம் சிங்கிலா அரசியலுக்கு வரும் என்றார்.

நடிகர் ரஜினிகாந்த் கடந்த மாதம் ரசிகர்களைச் சந்தித்தார். அப்போது அரசியல் குறித்து அவர் கூறிய கருத்துகளால் பரபரப்பு ஏற்பட்டது. ரஜினியின் அரசியல் கருத்துக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் ஆதரவும், எதிர்ப்பும் கலந்து வருகின்றன. இதனால், ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து பரபரப்பு தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

Add comment
Inneram.com moderator has right to block inappropriate comments. Please comment responsibly.