சசிகலா அடைக்கப்பட்டிருக்கும் சிறையில் அதிகாரிகள் திடீர் ஆய்வு!

பெங்களூரு(16 ஜூலை 2017): சசிகலா அடைக்கப்பட்டுள்ள பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலாவிடம் ரூ.2 கோடி வரை லஞ்சம் வாங்கிக்கொண்டு சிறையில் சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக சிறைத்துறை டிஐஜி ரூபா பரபரப்பு தகவலை வெளியிட்டார். இதற்கு டிஜிபி சத்திய நாராயணராவ் மறுப்பு தெரிவித்தார். இந்த சம்பவம் காரணமாக சத்திய நாராயணராவ், ரூபா இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் சிறையில் நடக்கும் முறைகேடுகள் தொடர்பாக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வினய்குமார் தலைமையில் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.