ஜனாதிபதி தேர்தல் தொடங்கியது: அதிமுக எம்.எல்.ஏக்கள் மாற்றி வாக்களிக்க வாய்ப்பு!

Monday, 17 July 2017 10:08 Published in தமிழகம்

சென்னை(17 ஜூலை 2017): இந்திய ஜனாதிபதி தேர்தல் தொடங்கியது. பாஜக வேட்பாளருக்கு அதிமுக இரு அணிகளும் ஆதரவளித்துள்ள நிலையில் மாற்றி வாக்களிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

தமிழகத்தில் மொத்தம் உள்ள 233 எம்எல்ஏ-க்களில், அ.தி.மு.க. பெயரில் 135 எம்எல்ஏ-க்கள் உள்ளனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, டி.டி.வி.தினகரன், ஓ.பன்னீர்செல்வம் என்று மூன்று அணிகளாக அவர்கள் பிரிந்து நிற்கிறார்கள். மேலும், அ.தி.மு.க. சின்னத்தில் வெற்றி பெற்ற மனித நேய ஜனநாயகக் கட்சி தமிமுன் அன்சாரி, 'காங்கிரஸ் வேட்பாளரை ஆதரிப்பேன்' என்று வெளிப்படையாக அறிவித்துவிட்டார். கொங்கு இளைஞர் பேரவை தனியரசு, முக்குலத்தோர் புலிப்படை கருணாஸ் ஆகியோர், தங்கள் முடிவை இன்னும் வெளிப்படையாகச் சொல்லவில்லை என்றாலும் அவர்கள் தி.மு.க. ஆதரவு நிலைப்பாட்டை சமீபகாலமாக எடுத்துள்ளனர்.

அ.தி.மு.க. எம்பி-க்கள் மூன்று அணிகளாக உள்ளனர். அவர்கள் அனைவரும் பா.ஜ.க. வேட்பாளரை ஆதரிக்க வேண்டும் என்று கட்சி தலைமை அறிவுறுத்தியிருக்கிறது. ஆனாலும், பா.ஜ.க. மீது உள்ள கோபத்தால், டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்பி-க்கள், எம்எல்ஏ-க்கள், என்ன நிலைப்பாடு எடுக்கப்போகிறார்களோ என்ற பயத்தில் எடப்பாடி பழனிசாமி அணி இருக்கிறது.

ஏற்கனவே திமுக எதிர்கட்சிக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்துவிட்டது.

Add comment
Inneram.com moderator has right to block inappropriate comments. Please comment responsibly.