கமல் - ஸ்டாலின் பரிதாப நிலை: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி!

Monday, 17 July 2017 10:25 Published in தமிழகம்

சென்னை(17 ஜூலை 2017): கமலுக்கு ஸ்டாலின் பரிந்து பேசுவதை பார்த்தால் பரிதாபமாக உள்ளது என்று நிதியமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடர்பாக எழுந்த சர்ச்சை குறித்து, அண்மையில் நடிகர் கமல்ஹாசன் விளக்கம் அளித்தார். இந்த ஆட்சியில் எல்லா துறைகளுமே கெட்டுப்போய் இருக்கிறது என்றார். செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளிக்கையில் கமல்ஹாசன், தமிழகத்தில் அனைத்துத் துறைகளிலும் ஊழல் அதிகரித்துவிட்டதாக குற்றம்சாட்டியிருந்தார். கமல்ஹாசனின் இந்த குற்றச்சாட்டுக்கு அமைச்சர்கள் தரப்பில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

அமைச்சர் ஜெயகுமார் பேசுகையில், தமிழக அரசை விமர்சிக்கும் நடிகர் கமல்ஹாசன், அரசியலுக்கு வந்து சாதிக்கட்டும். தைரியம் இருந்தால் அரசியலுக்கு வந்து கருத்து சொல்லட்டும். கமல் கூறும் கருத்துக்களுக்கு அமைச்சர்கள் பதில் மட்டுமே கூறுகின்றனர். திமுக கமல்ஹாசனுக்கு ஆதரவளிக்கும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. கமலுக்கு ஆதரவளிக்கும் ஸ்டாலினை பார்த்தால் பரிதாபமாக உள்ளது' என்றார்.

 

Add comment
Inneram.com moderator has right to block inappropriate comments. Please comment responsibly.