சத்யாராஜ் மகள் டாக்டர் திவ்யாவுக்கு கொலை மிரட்டல்: பிரதமருக்கு அவசர கடிதம்!

Monday, 17 July 2017 12:16 Published in தமிழகம்

சென்னை(17 ஜூலை 2017): நடிகர் சத்யராஜ் மகள் டாக்டர் திவ்யாவுக்கு அமெரிக்க மருந்து நிறுவனம் கொலை மிரட்டல் விடுவதாக உடனடி நடவடிக்கை வேண்டி பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

நியூட்ரிஷியன் டாக்டரான திவ்யா, பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

மான்புமிகு பாரத பிரதமர் அவர்களுக்கு, நான் சென்னையில் ஊட்டச்சத்து டாக்டராக பணிபுரிந்து வருகிறேன். சில தினங்களுக்கு முன்பு அமெரிக்காவின் மருந்து நிறுவனம் ஒன்று என்னை சந்தித்து அவர்கள் சிபாரிசு செய்யும் மருந்துகளை என் நோயாளிகளுக்கு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியது.

நான் ஆய்வு செய்தவகையில் அவர்கள் சிபாரிசு செய்த மருந்து மிகமோசமானதாகும். மேலும் இந்தியாவில் ஒப்புதல் இல்லாத அந்த மருந்தை நான் எப்படி நோயாளிகளுக்கு வழங்க முடியும் என்று மறுத்துவிட்டேன். எனக்கு அவர்கள் லஞ்சம் தரவும் முற்பட்டனர். அதையும் நான் மறுத்துவிட்டேன்.

தற்போது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி எனக்கு கொலை மிரட்டல் விடுகின்றனர். எனவே உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்."

இவ்வாறு அந்த கடிதத்தில் டாக்டர் திவ்யா தெரிவித்துள்ளார்.

Divya Sathyaraj, who is also the daughter of Kollywood actor Sathyaraj, was recently threatened by a few manufacturers from the US. She refused to prescribe the multivitamin being marketed by them, after she discovered that it contained harmful ingredients. Livid at what happened, she penned off an open letter to the PM,

Last modified on Monday, 17 July 2017 12:21
Add comment
Inneram.com moderator has right to block inappropriate comments. Please comment responsibly.