தமிழரின் மரணத்திற்கு பொறுப்பேற்று கேரள முதல்வர் மன்னிப்பு கோரினார்!

திருவனந்தபுரம்(10 ஆகஸ்ட் 2017):விபத்தில் சிக்கிய தமிழரின் மரணத்திற்கு பொறுப்பேற்று கேரள முதல்வர் பினராயி விஜயன் பகிரங்க மன்னிப்பு கோரினார்.

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் பால் வியாபாரம் செய்து வந்த முருகன் என்பவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை விபத்து ஒன்றில் சிக்கினார். அவருக்கு

சிகிச்சையளிக்க கேரள மருத்துவமனைகள் மறுத்துவிட்டதால், அவர் பல மணிநேரம் அலைக்கழிக்கப்பட்டு, இறுதியில் ஆம்புலன்சில் உயிரிழந்ததாக அதன் ஓட்டுநர் தெரிவித்தார்.

இந்த விவகாரம் குறித்து விளக்கமளிக்க, கொல்லம் சுற்றுவட்டாரத்தில் உள்ள ஏழு மருத்துவமனைகளுக்கு கேரள மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது

இந்நிலையில், 'தமிழர் ஒருவருக்கு மருத்துவம் பார்க்க மறுத்ததால், அவர் உயிர் பிரிந்தது கேரள மாநிலத்துக்கே அவமானம்' என்று முதலமைச்சர் பினராயி விஜயன் சட்டப்பேரவையில் பகிரங்கமாக மன்னிப்புக் கோரியதோடு மட்டுமல்லாமல் இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.