தமிழக அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம்: ஸ்டாலின் தகவல்!

சென்னை(11 ஆகஸ்ட் 2017): அவசியம் ஏற்பட்டால் தமிழக அரசின் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்படும் என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் அக்கட்சி மாவட்ட செயலர்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு பின் ஸ்டாலின் நிருபர்களிடம் பேசுகையில்," அதிமுக ஓ.பி.எஸ்., அணி, எடப்பாடி அணி, தினகரன் அணி என மூன்றாக பிரிந்தபோதே தமிழகத்தில் அசாதாரண சூழல் நிலவுகிறது . இச்சூழ்நிலையால், மக்கள் துன்பப்படுகின்றனர். இதற்கு நிச்சயம் தீர்வு கிடைக்கும். தேவைப்பட்டால், தமிழக அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படும்.' என்றார்.
தமிழக அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்: ஸ்டாலின் தகவல்!