நீட் தேர்வு: தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

புதுடெல்லி(11 ஆகஸ்ட் 2017): நீட் தேர்வு தொடர்பாக விலக்கு அளிக்கக்கோரும் மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

மருத்துவ படிப்பில் சேர மாநில பாட திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 85 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் சிபிஎஸ்இ மாணவர்கள் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், உள் ஒதுக்கீடு வழங்கும் உத்தரவை ரத்து செய்தது.

இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. அவசர வழக்காக விசாரித்த உச்ச நீதிமன்றம், மேல்முறையீட்டை தள்ளுபடி செய்தது.