அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு: புதிய ஊதியம் பற்றிய விவரம்!

சென்னை(12 அக் 2017): அரசு ஊழியர்கள் ஊதிய உயர்வுக்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

ரூ.21,792 ஊதியம் பெறும் அலுவலக உதவியாளர் இனி இனி ரூ.26,720 பெறுவார். மேலும் இளநிலை உதவியாளர் ஊதியம் ரூ.37,936ல் இருந்து ரூ.47,485 ஆகிறது.இதேபோல் இடைநிலை ஆசிரியர் சம்பளம் ரூ.40,650ல் இருந்து ரூ.50,740 ஆகிறது. மேலும் ஆய்வாளர் ஊதியம் ரூ.69,184ல் இருந்து ரூ.84,900 ஆக உயருகிறது. துணை ஆட்சியர் ஊதியம் ரூ.81,190ல் இருந்து ரூ.98,945 ஆக உயருகிறது.

இதேபோல் சத்துணவு அமைப்பாளர்களுக்கு சிறப்பு ஓய்வூதியம் ரூ.1,500இல் இருந்து ரூ.2,000ஆக உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி மாதம் ஊதியமாக ரூ.10,810 வாங்கும் சத்துணவு அமைப்பாளர்கள் இனி ரூ.13720 பெறுவார்கள். மேலும் சத்துணவு சமையலர்கள் சம்பளம் ரூ.6, 562ல் இருந்து ரூ.8, 680 ஆக உயருகிறது.