உச்ச நீதிமன்ற உத்தரவின்படி பட்டாசு வெடிக்கும்போது கடைபிடிக்க வேண்டியவைகள்!

சென்னை(12 அக் 2017): உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி பட்டாசு உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் பொதுமக்கள் கடைபிடிக்கவேண்டிய முக்கிய விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

தயாரிப்பாளர்கள் கடைப்பிடிக்க வேண்டியவை - தயாரிக்கப்படும் பட்டாசுகளில் அடங்கியுள்ள வேதிப்பொருள்கள் மற்றும் ஒலி அளவின் விவரத்தை பட்டாசு பேக்கிங் பெட்டியில் குறிப்பிடவேண்டும்.

பட்டாசு வெடிக்கும்போது ஏற்படும் ஒலி அளவானது நான்கு மீட்டர் தூரத்தில் 125 டெசிபல் (யூ-1-அளவீடு) அல்லது 145 டெசிபல் (ஊ-அளவீடு) க்கு அதிகமாக ஏற்படுத்தும் பட்டாசுகளைத் தயாரிக்கவோ, விற்பனை செய்யவோ அல்லது பயன்படுத்தவோ கூடாது.

சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் கடைக்காரர்கள் கடைபிடிக்க வேண்டியவை - 125 டெசிபல் அளவுக்கு மேல் ஒலி எழுப்பும் பட்டாசுகளை விற்பனைசெய்யக்கூடாது. உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி தயாரிக்கப்படாத பட்டாசுகளை விற்பனைசெய்யக்கூடாது.

*இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை ஒலி எழுப்பக்கூடிய பட்டாசுகளை கண்டிப்பாக வெடிக்கக்கூடாது.

*125 டெசிபல் அளவுக்குக் கீழ் ஒலி எழுப்பக்கூடிய பட்டாசுகளை மட்டுமே வாங்க வேண்டும்.