பிரதமரை சந்தித்தது ஏன்?- எடப்பாடியுடன் மனவருத்தமா?: ஓ.பி.எஸ் விளக்கம்!

புதுடெல்லி(12 அக் 2017): பிரதமர் மோடியை மரியாதை நிமித்தம் சந்தித்தேன் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

டெல்லியில், இன்று பிரதமர் மோடியை, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேசினார். அதன் பிறகு அவர் நிருபர்களிடம் பேசிய ஓ.பி.எஸ், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தந்த கடிதத்தை பிரதமரிடம் கொடுத்தேன். மற்றபடி அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை. தமிழகத்தில் டெங்கு பாதிப்பு குறித்து ஆராய, மத்திய மருத்துவ குழுவை அனுப்ப பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். எனக்கும், சேகர்ரெட்டிக்கும் எந்த தொடர்பும் இல்லை. இனிமேல், கீழ்மட்டத்தில் இருந்து உழைத்தால் தான் கட்சியில் சேர்க்கப்படுவார்கள்." என்றார்.

மேலும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் மனஸ்தாபமா? என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு அப்படி எதுவும் இல்லை என்று பதிலளித்தார்.