டிசம்பர் இறுதிக்குள் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்!

சென்னை(12 அக் 2017): டிசம்பர் இறுதிக்குள் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ஜெயலலிதா மறைவை அடுத்து அவருடை தொகுதியான ஆர்.கே.நகர் காலியாக உள்ளது. இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு பணப்பட்டுவாடா காரணமாக தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில் டிசம்பர் மாதம் 31-ம் தேதிக்குள் ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் நடத்தி முடிக்கப்படும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் அச்சல் குமார் ஜோதி தெரிவித்துள்ளார்