சசிகலா மீண்டும் சிறையிலடைப்பு!

Thursday, 12 October 2017 20:12 Published in தமிழகம்

பெங்களூரு(12 அக் 2017): பரோலில் வெளிவந்த சசிகலாவின் பரோல் காலம் 5 நாள் முடிவடைந்த நிலையில் பெங்களூரு சிறையில் அவர் மீண்டும் அடைக்கப்பட்டார்.

வருமானத்துக்கு அதிகமான சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். அவர் கணவர் நடராசனின் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்தது. அதையடுத்து அவருக்கு சிறுநீரகம் மற்றும் கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. நடராசனைப் பார்ப்பதற்காக சசிகலா 15 நாள்கள் பரோல் கோரி கர்நாடக மாநிலம் சிறைத்துறைக்கு விண்ணப்பித்திருந்தார். கர்நாடக அரசு, சசிகலாவுக்கு 5 நாள்கள் மட்டும் பரோல் வழங்கியது.

அதையடுத்து அவர், ஐந்து தினங்களுக்கு முன்னர் சிறையிலிருந்து வந்தார். சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள, அவர் கணவர் நடராசனை நேரில் சென்று பார்வையிட்டார். அவரின் ஆதரவாளர்கள், சசிகலா செல்லும் இடங்களில் பலத்த ஆதரவு அளித்தனர். இந்தநிலையில், இன்றோடு பரோல் முடிந்த நிலையில், சென்னையிலிருந்து காரில் புறப்பட்டுச் சென்ற அவர், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார்.

Add comment
Inneram.com moderator has right to block inappropriate comments. Please comment responsibly.