இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது!

கோவை(12 அக் 2017): இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை வழக்கில் மேலும் ஒருவரை கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் தெரிவித்துள்ளது.

இந்து முன்னணியின் கோவை மாநகர மாவட்ட மக்கள் செய்தித்தொடர்பாளராக இருந்தவர், சசிகுமார். இவர், கடந்த ஆண்டு மர்ம நபர்களால் கொடூரமாக வெட்டிக் கொலைசெய்யப்பட்டார். தமிழகத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டது. இதில் கே. கே.நகரைச் சேர்ந்த ஜாபர் அலியின் மகன் சையது அபுதாஹிர் என்பவரை சிசிஐடி காவல்துறை முதலில் கைது செய்தது. மேலும் சதாம் என்பவரும் கைது செய்யபப்ட்டார்.

இந்நிலையில் மேலும் ஒரு நபரான சுபேர் என்பவரையும் காவல்துறை கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.