காதலிக்க மறுத்த பெண் எரித்துக் கொலை!

Tuesday, 14 November 2017 09:44 Published in தமிழகம்

சென்னை(14 நவ 2017): சென்னையில் காதலிக்க மறுத்த இளம்பெண் இளைஞர் ஒருவரால் எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

சென்னை வேளச்சேரியில் உள்ள இந்துஜா என்ற இளம்பெண்ணை ஆகாஷ் என்பவர் ஒருதலையாக காதலித்துள்ளார். மேலும் அவரது காதலை இந்துஜா ஏற்க மறுத்ததால் வேளச்சேரி ஏஜிஎஸ் காலனியில் நேற்று (திங்கள்கிழமை) இரவு வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த இந்துஜா மீது ஆகாஷ் பெட்ரோல் ஊற்றி தீவைத்தார். இதில் படுகாயமடைந்த அவர், சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரை காப்பாற்ற முயன்ற இந்துஜாவின் தாயார் ரேணுகா மற்றும் தங்கை நிவேதிதா ஆகியோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தலைமறைவான ஆகாஷை போலீசார் தேடி வருகின்றனர்.

 

Yong girl murdered due to onside love.

Add comment
Inneram.com moderator has right to block inappropriate comments. Please comment responsibly.