சசிகலா உறவினர் இல்லங்கள் ரெய்டு குறித்து பொன் ராதாகிருஷ்ணன் கருத்து!

Tuesday, 14 November 2017 14:00 Published in தமிழகம்

சென்னை(14 நவ 2017): வருமான வரித்துறை என்பது தனி அமைப்பு. அது தனது கடமையை உரிய சமயத்தில் நிறைவேற்றி வருகிறது என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சசிகலாவின் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகள், அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் அரசியல் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

இதுகுறித்து இன்று கன்னியாகுமரியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், ‘வருமான வரித்துறையினர் தங்கள் கடமையைச் செய்கின்றனர். வருமான வரித்துறை என்பது தனி அமைப்பு. அது செய்யும் வேலைகளுக்கும், மத்திய அரசுக்கும் தொடர்பு இருப்பதாக சொல்வது தவறானது. தன்வினை தன்னைச் சுடும் என்ற பழமொழிக்கேற்ப சசிகலா மற்றும் அவரது உறவினர்களின் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்’ என தெரிவித்துள்ளார்.

Add comment
Inneram.com moderator has right to block inappropriate comments. Please comment responsibly.