மதமாற்றம் ஏஜெண்ட்: அதிமுக அமைச்சருக்கு ஹெச்.ராஜா கண்டனம்!

Tuesday, 14 November 2017 19:06 Published in தமிழகம்

சென்னை(14 நவ 2017): அமைச்சர் விஜய பாஸ்கர் மதமாற்ற ஏஜெண்டாக வேலை பார்க்கிறார் என்று ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை தனியார் கிறிஸ்தவ பள்ளி ஒன்றில் உணவு பாதுகாப்பு முறை பற்றிய விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய சுகாதார துறை அமைச்சர் விஜய பாஸ்கர், கிறிஸ்தவ பள்ளிகள் மாணவர்களுக்கு பாடத்தையும், அதோடு ஒழுக்கத்தையும் கற்றுக் கொடுக்கின்றன. என்று பேசினார்.

இந்நிலையில் அமைச்சர் விஜயபாஸ்கரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள ஹெச்.ராஜா அவரது ட்விட்டர் பக்கத்தில் "திராவிட பூட்டுப் பூணை வெளியே: அண்ணாதுரை முதல்வரனவுடன் பள்ளிகளில் நீதிபோதனைகளை ஒழித்து ஒழுக்கக்கேட்டை போதித்த ஈ.வே.ரா கூட்டம், கிறித்தவ பள்ளிகளே ஒழுக்கம் கற்று தருகின்றன என்ற மதமாற்ற ஏஜெண்டாக மாறியுள்ளனர். விஜய பாஸ்கரின் பேச்சு வன்மையாக கண்டிக்கத்தக்கது" என்று தெரிவித்துள்ளார்.

Add comment
Inneram.com moderator has right to block inappropriate comments. Please comment responsibly.