இந்துத்துவ தீவிரவாதம் குறித்த கமலின் மற்றுமொரு பரபரப்பு ட்வீட்!

Tuesday, 14 November 2017 23:16 Published in தமிழகம்

சென்னை(14 நவ 2017): இந்துத்துவ தீவிரவாதம் குறித்து நடிகர் கமல் மற்றுமொரு பரபரப்பு ட்விட் பதிவு வெளியிட்டுள்ளார்.

இந்து தீவிரவாதம் உள்ளது என்று நடிகர் கமல் சமீபத்தில் ட்விட்டர் பதிவிட்டு சர்ச்சையை கிளப்பியிருந்தார்.

இந்நிலையில் ஒரு சிறுவன் கைதில் கத்தியை கொடுத்து கமலின் போஸ்ட்டரை ஆவேசத்துடன் குத்துவது போன்றும் பின்னணியில் ஒருவர் நல்ல குத்து விடாதே என்று சிறுவனை ஊக்குவிப்பது போன்றும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்த வீடியோ குறித்து பலரும் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். அதில் குறிப்பாக இசை என்பவர் "இந்து தீவிரவாதம் குழந்தைகள் கையில் கத்தியை திணிக்கிறது. மனம் பதறுகிறது கமல் சார் நீங்கள் சொன்னதை சரியென்று நிறுவுகின்றனர். என்று பதிவிட்டு இருந்தார்.

இதனிடையே நடிகர் கமல் இந்த வீடியோ குறித்து ட்விட்டர் பதிவு இட்டுள்ளார் அதில் "என் பிள்ளைகள். அய்யகோ! ஒரு பிள்ளை எனை குத்திச்சாவதே மேல். என் வளர்ந்த சகோதரன் குற்றவாளியாய் தமிழ் பேசிக் குற்றம் ஏற்பதை தமிழ்இனம் சகியாது. இயற்க்கை எனைக் கொன்றே மகிழும். அதன் முன் மகிழ உமக்கும் உரிமை உண்டு. கொன்றுதான் பாரும். வென்றே தீர்வேன்." என்று பதிவிட்டுள்ளார்.

Add comment
Inneram.com moderator has right to block inappropriate comments. Please comment responsibly.