சென்னையில் பாபர் மசூதி கட்ட வேண்டும் - ஐயப்ப பக்தர் கோரிக்கை!

சென்னை(06 டிச 2017): பாபர் மசூதி இடிப்பு தின ஆர்ப்பாட்டத்தில் சென்னையில் பாபர் மசூதி கட்ட வேண்டும் என்று ஐயப்ப பக்தர் ஒருவர் கோரிக்கை வைத்தது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.

இன்று டிசம்பர் 6 மசூதி இடிக்கப்பட்ட கருப்பு நாளில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் மஜக சார்பில் இரயில் நிலைய முற்றுகை போரட்டம் நடத்தப்பட்டது. இதில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், பல்வேறு சமுதாயங்களை சேர்ந்த தலைவர்கள் ஜனநாயக அமைப்புகளின் பிரநிதிகள் கலந்துக் கொண்டனர்.

அதில் இந்து, கிறிஸ்துவ, தமிழ் மக்களும் பரவலாக பங்கேற்றதன் மூலம் மஜக இப்போராட்டத்தை பொதுமைப் படுத்தியுள்ளது. சென்னையில் பாபர் மஸ்ஜித்தை கட்டக்கோரி ஒரு ஐயப்ப சாமி பக்தர் மேடை எறி முழக்கமிட்டு, அனைவரையும் சிலிர்க்க வைத்தார்.
சென்னையில் பல சமூக பெண்கள் கைக்குழந்தைகளுடன் பங்கேற்றனர்.. ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்ற போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் அவர்களும், காங்கிரஸ் கட்சி சார்பில் J.M.ஆரூன் Ex.Mp அவர்களும் பங்கேற்றனர்..

சமூதாய ரீதியாக தேவர் சமுதாயம் சார்பில் அகில இந்திய பெடரல் பிளாக் தலைவர் ஆனந்த முருகன், யாதவ் சமுதாயம் சார்பில் தமிழக சமாஜ்வாடி கட்சி தலைவர் இளங்கோ யாதவ் , கவுண்டர் சமுதாயம் சார்பில் தமிழக கொங்கு இளைஞர் பேரவை தலைவர் உ.தனியரசு MLA அவர்கள், தலித் சமுதாயம் சார்பில் விடுதலை தமிழ் புலிகள் கட்சி தலைவர் குடந்தை அரசன் ஆகியோர் பங்கேற்று கண்டன உரையாற்றினர்.

மஜக சார்பில் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி , மாநில செயளாலர் என்.ஏ.தைமிய்யா ஆகியோர் கண்டன உரையாற்றினார். மாநில துணைச் செயலாளர் பல்லாவரம் ஷபி, மீனவர் அணி மாநில செயலாளர் பார்த்திபன் , மாணவர் இந்தியா மாநில செயலாளர் அஸாருதீன் , துணைச் செயலாளர் பஷிர் அஹமத், மாநில இளைஞரணி துணை செயலாளர் தாரிக், தகவல் தொழிநுட்ப அணி மாநில துணைச் செயலாளர் சிக்கந்தர் பாட்சா, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் சைய்யது அபுதாஹிர் , முபாரக் , மத்திய கிழக்கு மாவட்ட செயளாலர் முஹம்மத் ஹாலித் , மாவட்ட பொருளாளர் பிஸ்மில்லாஹ் கான் , மாவட்ட துணைச் செயலாளர்கள் பீர் முஹம்மது , ரவுப் ரஹிம் , அமிர் அப்பாஸ் ,தென் சென்னை (கிழக்கு) M.மொஹம்மத் இக்பால், M. அப்துல் கைய்யூம், A.ராஜா முஹம்மது, A.ஸ்டிபன், தென் சென்னை (மேற்கு) H.முஹம்மது கடாபி, A.காதர் ஷரீப், G. அப்துல் தமிம், மத்திய சென்னை மேற்கு I.முஹம்மது இப்ராஹிம், S. அன்வர் இப்ராஹிம், ஷாகுல் ஹமீது, வட சென்னை மே M.அன்வர் , அக்பர், அப்துல் ரசாக் , அம்ஜத் உசேன் ஆகியோர் பங்கேற்றனர். இப்போராட்டத்தில் 1200 -க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.