பாபர் மசூதி நினைவு தினம் - ரெயில் மறியலில் ஈடுபட்டவர்கள் கைது!

கோவை(06 டிச 2017): பாபர் மசூதி இடிப்பு தினமான இன்று கோவையில் ரெயில் மறியலில் ஈடுபட்ட மனித நேய ஜனநாயக கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.

பாபர் மசூதி இடிப்பு தினமான இன்று இந்தியாவின் கறுப்பு தினமாக முசுலீம் அமைப்பினர் அனுசரித்து வருகின்றனர். இந்த நிலையில், இந்த வழக்கில் நியாயமன தீர்ப்பை நீதித்துறை வழங்க வேண்டும் என்று வலியியுறுத்தி மனித நேய ஜனநாயக கட்சியினை சேர்ந்தவர்கள் கோவை ரயில் நிலையத்தில் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற 300க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். இந்த போராட்டத்தால் ரயில் நிலையம் அருகே சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.