சன் டிவி தொகுப்பாளர் மணிமேகலை முஸ்லிம் இளைஞருடன் காதல் திருமணம்!

சென்னை(06 டிச 2017): சன் டிவி தொகுப்பாளர் மணிமேகலை முஸ்லிம் இளைஞரை காதல் திருமணம் செய்துள்ளார்.

ஹுசைன் என்ற முஸ்லிம் இளைஞரை மணிமேகலை காதலித்து வந்துள்ளார். இது மணிமேகலையின் பெற்றோருக்கு சம்மதமில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் ஹுசைனை மணிமேகலை பதிவு திருமணம் செய்துள்ளார்.

இதுகுறித்து அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் மணிமேகலை கூறியிருப்பதாவது, "காதலுக்கு மதமில்லை. ஹுசைனை காதலிக்கிறேன். தந்தையை சம்மதிக்க வைக்க முடியவில்லை, எனவே நான் ஹுசைனை பதிவு திருமணம் செய்துள்ளேன். ஶ்ரீராமஜெயம், அல்லா" என்று அதில் கூறப்பட்டுள்ளது.