சசிகலா கணவர் நீதிமன்றத்தில் சரண்!

Thursday, 11 January 2018 14:26 Published in தமிழகம்

சென்னை(11 ஜன 2018): சொகுசு கார் இறக்குமதி வழக்கில் சசிகலா கணவர் எம். நடராஜன் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.

கடந்த 1994-ம் ஆண்டு வெளிநாட்டில் இருந்து லெக்சஸ் மாடல் சொகுசு காரை இறக்குமதி செய்ததில் ரூ1.6 கோடிக்கு வரிஏய்ப்பு செய்ததாக சசிகலாவின் கணவர் எம்.நடராஜன், அவரது உறவினர் பாஸ்கரன் மற்றும் யோகேஷ் பாலகிருஷ்ணன், சுஜரிதா சுந்தரராஜன் ஆகிய 4 பேர் மீது சிபிஐ வழக்குத் தொடர்ந்தது.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நடராஜன் உள்ளிட்டவர்களுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து சிபிஐ நீதிமன்றம் கடந்த 2010-ல் தீர்ப்பளித்தது. இந்த சிறை தண்டனையை சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது. இதையடுத்து சிறுநீரக அறுவை சிகிச்சை செய்துள்ள எம்.நடராஜன் தனியார் மருத்துவமனையின் தொடர் கண்காணிப்பு மற்றும் சிகிச்சையில் இருந்தார். அவரின் உடல்நிலையைக் காரணம் காட்டி கீழ் நீதிமன்றத்தில் சரணடைவதில் இருந்து அவருக்கு விலக்கு அளிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் அவரது சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. உடல்நிலை சரியில்லாததை காரணம் காட்டி நடராஜன் சிறை செல்ல விலக்கு அளித்திருந்தது. உச்சநீதிமன்ற உத்தரவைக் காட்டி சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் நடராஜன் ஜாமீன் மனு அளித்திருந்தார். இதனையொட்டி சசிகலா கணவர் எம். நடராஜன் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.

Add comment
Inneram.com moderator has right to block inappropriate comments. Please comment responsibly.