பேருந்து இல்லாததால் நாய் வண்டியில் மக்கள் பயணித்த அவலம்!

Thursday, 11 January 2018 21:25 Published in தமிழகம்

சென்னை(11 ஜன 2018): போக்குவரத்து ஊழியர்கள் ஸ்ட்ரைக்கால் பேருந்து இல்லாமல் நாய் வண்டியில் பொதுமக்கள் பயணித்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் போக்குவரத்து பாதிப்பால் அவதியுற்ற மக்கள் வேறு வழியின்றி நாய் வண்டியில் பயணம் மேற்கொண்டுள்ளனர். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் எந்த பகுதி என்ற தகவல் இல்லை.

இதற்கிடையே போக்குவரத்து ஊழியர்கள் தங்கள் போராட்டத்தை தாற்காலிகமாக வாபஸ் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Add comment
Inneram.com moderator has right to block inappropriate comments. Please comment responsibly.