முன்னாள் அமைச்சர் பா. வளர்மதிக்கு தந்தை பெரியார் விருது!

Friday, 12 January 2018 22:10 Published in தமிழகம்

சென்னை(12 ஜன 2018): தமிழக அரசின் சார்பில் வழங்கப்படும் தந்தை பெரியார் விருதுக்கு முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தமிழ் மொழி மற்றும் இலக்கிய வளர்ச்சிக்கும் தமிழ்ச் சமுதாய உயர்வுக்கும் பங்காற்றி வருபவர்களுக்கு ஆண்டுதோறும் தமிழக அரசு விருது வழங்கி கௌரவித்து வருகிறது. அந்தவகையில் சென்ற ஆண்டுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதுதொடர்பாகத் தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், “தமிழ் மொழி மற்றும் இலக்கிய வளர்ச்சிக்கும் தமிழ்ச் சமுதாய உயர்வுக்கும் தொண்டாற்றிப் பெருமை சேர்த்த தமிழ்ப் பேரறிஞர்கள் மற்றும் தன்னலமற்ற தலைவர்கள் பெயரில், தமிழ்நாடு அரசு ஏற்படுத்தியுள்ள திருவள்ளுவர் விருது உள்ளிட்ட கீழ்க்காணும் விருதுகளைப் பெற தகுதியான பெருமக்களை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளார்.

1. திருவள்ளுவர் விருது - முனைவர் கோ.பெரியண்ணன்
2. பெரியார் விருது - பா.வளர்மதி
3. அம்பேத்கர் விருது - டாக்டர் சகோ.ஜார்ஜ்.கே.ஜே
4. அண்ணா விருது - அ.சுப்ரமணியன்
5. காமராசர் விருது - தா.ரா.தினகரன்
6. பாரதியார் விருது - முனைவர் சு.பாலசுப்ரமணியன்
7. பாரதிதாசன் விருது - கே.ஜீவபாரதி
8. திரு.வி.க விருது - எழுத்தாளர் வை.பாலகுமாரன்
9. முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் விருது - முனைவர் பா.மருதநாயகம்

பா வளர்மதி இவர் தற்போது தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவராக உள்ளார் எனபது குறிப்பிடத்தக்கது.

Last modified on Friday, 12 January 2018 22:36
Comments   
+1 #1 சுகுமாரன் 2018-01-13 12:04
பகுத்தறிவுக்கு கொஞ்சமும் ஒட்டாத மண்சோறு புகழ் வளர்மதிக்கு பெரியார் விருது .மிகக் கேவலமானது.பெரியாருக்கு.
Quote
Add comment
Inneram.com moderator has right to block inappropriate comments. Please comment responsibly.