தஞ்சை மாவட்டம் அதிரையில் நடந்த மாபெரும் இஸ்லாமிய மாநாடு!

அதிராம்பட்டினம்(11 பிப் 2018): தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் இஸ்லாமிய மாநாடு வெள்ளி சனி ஆகிய இரண்டு தினங்கள் நடைபெற்றது.

தப்லீக் ஜமாத் என்ற அமைப்பின் சார்பில் தஞ்சை மற்றும் திருவாரூர் மாவட்ட மாநாடு கடந்த 09 ஆம் தேதி அதிராம்பட்டினம் பெரிய ஜும்ஆ பள்ளியில் வெள்ளிக்கிழமை மாலை தொடங்கி சனிக்கிழமை இரவு முடிவடைந்தது.

இதில் ஏராளமான இஸ்லாமிய அறிஞர்கள் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்கள். சுமார் 9 ஆயிரம் பொதுமக்கள் இதில் கலந்துகொண்டனர்.

மாநாட்டையொட்டி எஸ்டிபிஐ தன்னார்வலர்களும், மற்றும் இதர உள்ளூர் அமைப்புகள் தன்னார்வலர்களாகவும் பணிபுரிந்தனர். தமுமுக தன்னார்வலர்கள், ஆம்புலன்ஸ் வசதி ஏற்பாடுகளை செய்திருந்தனர்.