சட்டசபையில் ஜெயலலிதா உருவப்படம் - எதிர்கட்சிகள் புறக்கணிப்பு!

சென்னை(12 பிப் 2018): சட்டசபையில் ஜெயலலிதா உருவப்படம் திறக்கப்பட்டது. எதிர்கட்சிகள் இதனை புறக்கணித்தன.

சட்டப்பேரவையில் ஏற்கனவே 10 தலைவர்களின் படங்கள் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில், மற்ற தலைவர்களின் படங்களைப் போன்று 7 அடி உயரமும் 5 அடி அகலமும் கொண்ட ஜெயலலிதா படம் சட்டப்பேரவை மண்டபத்தில் இன்று வைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, ஜெயலலிதா படத்திறப்பு நிகழ்ச்சியில் தி.மு.க. பங்கேற்காது என எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே தெரிவித்திருந்தார். அதன்படி திமுக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர் கட்சிகள் புறக்கணித்தன.