பிரதமர் மோடி மனைவியின் பாஸ்போர்ட் விண்ணப்பம் நிராகரிப்பு!

Monday, 09 November 2015 17:30 Published in இந்தியா

புதுடெல்லி(09 நவ.2015): பிரதமர் மோடியின் மனைவி ஜசோதா பென் பாஸ்போர்ட் விண்ணப்பத்தினை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி நிராகரித்துள்ளார்.

பிரதமர் மோடியின் மனைவி ஜசோதா பென், குஜராத்தின் வட பகுதியில் உள்ள கிராமம் ஒன்றில் தனது சகோதரர் அசோக் மோடி குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இவர் வெளிநாட்டில் உள்ள தனது உறவினர்களைக் காண்பதற்காக பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்திருந்தார். ஆனால் அவர் திருமண சான்றிதழையோ, வாழ்க்கைத் துணைவருடனான கூட்டு பிரமாண பத்திரத்தையோ இணைத்து விண்ணப்பிக்கவில்லை என்பதால் அவரது பாஸ்போர்ட் விண்ணப்பத்தை பாஸ்போர்ட் அலுவலகம் ஏற்க மறுத்து திருப்பி அனுப்பியுள்ளது.

இந்நிலையில், பாஸ்போர்ட் பெறுவது பற்றிய சட்டப்பூர்வ வாய்ப்புகள் குறித்து ஜசோதா பென் ஆலோசித்து வருவதாக சகோதரர் மோடி தெரிவித்துள்ளார்.

Last modified on Monday, 09 November 2015 17:00

Add comment

நாகரிகம் தமிழர் பண்பாடு; அநாகரிகம் குணத்தின் வெளிப்பாடு!