மாலத்தீவில் அண்மையில் ஏற்பட்ட மக்கள் புரட்சியினை அடுத்து அந்த நாட்டின் அதிபராக இருந்த முஹம்மத் நாஷித் பதவி விலகினார். ”என்னைக் கொலை செய்யத் திட்டமிட்டதால்தான் நான் பதவி விலகினேன்” என தற்போது நாஷித் தெரிவித்துள்ளார்.
புரட்சியின் காரணமாக நான் பதவியில் இருந்து விலகவில்லை எனத் தெரிவித்த முன்னாள் அதிபர், ராணுவம் மற்றும் காவல்துறை அதிகாரிகள் தன்னைக் கொல்வதற்கு சதித்திட்டம் தீட்டியதனை அறிந்த பின்னரே உயிரைக் காப்பாற்றிக் கொள்ள பதவி விலகியதாக தெரிவித்தார். இவரது பதவி விலகலை அடுத்து துணை அதிபராக இருந்த முஹம்மத் வாஹித் ஹஸன் புதிய அதிபராக பொறுப்பேற்றுள்ளார்.
நேற்று (14.02.2012) வாஹித் ஹஸன் பதவி விலகி அதிபர் தேர்தல் நடைபெற வலியுறுத்தி நாஷித்தலைமையில் பேரணி நடைபெற்றது. இதில் நாஷித்துடைய மாலத்தீவு ஜனநாயகக் கட்சியைச் சார்ந்த ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். தேர்தல் நடைபெறும் வரை அரசை எதிர்த்து போராட வேண்டும் என மக்களை அவர் கேட்டுக் கொண்டார்.
| < முந்தைய செய்தியை வாசிக்க... | அடுத்த செய்தியை வாசிக்க... > |
|---|
என்னைக் கொல்ல சதி - மாலத்தீவு அதிபர் திடுக்கிடும் புகார்