இந்நேரம்.காம்

செய்தியாளர்கள்

தலையங்கம்

You are here: உலகம் அமெரிக்காவை இந்தியா அவமானப்படுத்துகிறது - அமெரிக்க அதிகாரி!

அமெரிக்காவை இந்தியா அவமானப்படுத்துகிறது - அமெரிக்க அதிகாரி!

அமெரிக்காவை இந்தியா அவமானப்படுத்துகிறது - அமெரிக்க அதிகாரி!"ஈரானிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதைத் தொடருவோம் என இந்தியா அறிவித்துள்ளது அமெரிக்காவை அவமானப்படுத்தும் செயல்" என அமெரிக்க அரசு முன்னாள் அதிகாரி நிகோலஸ் பர்ன்ஸ் குற்றம்சுமத்தியுள்ளார்.

மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் பகிரங்கமாக பகைமை நிலவி வருகிறது. ஈரானைத் தனிமைப்படுத்தும் நோக்கில் அமெரிக்கா தன் நட்பு நாடுகளிடம் ஈரான் உறவை முறித்துக் கொள்ள வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில், ஈரானிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதைத் தொடரப்போவதாக இந்தியா அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பு அமெரிக்காவை அவமானப்படுத்தும் செயல் எனவும் கடுமையாக கண்டிக்கத்தக்கது எனவும் அமெரிக்க அரசு முன்னாள் அதிகாரி நிகோலஸ் பர்ன்ஸ் கூறினார்.

இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் அணுசக்தி ஒப்பந்தம் ஏற்பட முக்கிய காரணகர்த்தாக்களில் இவர் ஒருவராவர். அவர் மேலும் கூறும்போது, "ஈரானிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை தொடரும் இந்தியாவின் முடிவு, அமெரிக்காவின் முகத்தில் விழுந்த அறை" என்றுள்ளார்.

சமீபத்தில் இந்திய தலைநகர் டெல்லியிலுள்ள இஸ்ரேல் தூதரகம் முன் நிறுத்தியிருந்த காரில் வைக்கப்பட்ட குண்டுக்கு ஈரானே காரணம் என இஸ்ரேல் பிரதமர் பென்சமின் நெதன்யாஹு பகிரங்கமாக குற்றம் சுமத்தியபோது, அக்குண்டுவெடிப்பின் பின்னணியில் எந்த ஒரு நாடும் செயல்பட்டதற்கான ஆதாரப்பூர்வமான தகவல் ஏதும் கிடைக்கவில்லை என இந்தியா பதிலடி கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Comments  

 
+12 # indian 2012-02-21 09:34
அட போடா வெண்ணை, நீ மட்டும் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு நிதி மற்றும் ராணுவ உதவி அளித்து இந்தியாவை அவமானபடுதாலாம், நாங்க திருப்பி கொடுத்தா வலிக்குதா
பதில் | Reply with quote | Quote
 
 
+7 # indian 2012-02-21 09:39
உனக்கு தான் உன் நாட்டு மக்களை பற்றி அக்கரை இல்லை, அவங்க எல்லாம் உன்னக்கு நாய் மாதிரி, மற்ற நாட்டையும் அதே ரீதியில் நினைத்தால், இந்தியா மட்டும் ஈரானிடம் ஆயில் வாங்குவதை நிறுத்தினால் இந்திய மக்களுக்கு யாரடா பதில் சொல்லுவது நீயா, உனக்கு எங்கு அதெல்லாம் ஒரு பொருட்டே கிடையாதே
பதில் | Reply with quote | Quote
 
 
+7 # sha 2012-02-21 10:47
அமெரிக்கா மட்டும் ஆயிரக்கனக்கில் அனு ஆயுதம் வச்சிருக்கலாம், யூதர்கல் வச்சிருக்கலாம் ஆனா ஈரான் கூடாதா என்ன ஒரு நியாயம்.........
பதில் | Reply with quote | Quote
 
 
+8 # Majeedh 2012-02-21 12:10
தொடர்ந்து இந்தியா இது போன்ட்ர அமெரிக்கவுக்கு அடி பனியாத முடிவுகலை நியாயமாக எடுக்க வென்டும்,
பதில் | Reply with quote | Quote
 
 
+8 # ansaari 2012-02-21 13:31
அமெரிக்காவின் அடிமை நாடு இல்லை நம் இந்தியா, நம்மை நிர்பந்திக்க அவர்கலுக்கு உரிமை இல்லை.... இந்தியாவின் முடிவு வரவேர்கத்தக்கது....
பதில் | Reply with quote | Quote
 
 
+6 # sahul 2012-02-21 16:48
A good Decision
பதில் | Reply with quote | Quote
 
 
+3 # ஜெஹபர் 2012-02-21 17:55
முன்னாள் அரசு அதிகாரியே இப்படி சொல்லுறாரா?அப்போ வேலையை விட்டு போனவன் எல்லாம் இந்தியாவை பற்றி பேசுவானுஙளா???போங்கடா நீங்களும் உங்க ???மானங்கெட்டவனுங்கதானேடா நீங்க???
பதில் | Reply with quote | Quote
 
 
-1 # அயூப்கான் 2012-02-21 18:23
இந்தியாவும் அமெரிக்காவின் அடிமை நாடுகளில் ஒன்றே. இது போன்ற அறிவிப்புக்களால் அமெரிக்காவிடமிருந்து அதிக நிதியுதவியை கன்டிஷன் இல்லாமல் பெற ஓர் உக்தியே.
பதில் | Reply with quote | Quote
 
 
+2 # riyaz 2012-02-21 20:24
americans things they want to rule the world under their demand,india never surrender to its order they must know...
பதில் | Reply with quote | Quote
 
 
0 # sahibraa 2012-02-23 17:56
very good decisin just wait have stilel more
பதில் | Reply with quote | Quote
 
 
0 # sahibraa 2012-02-23 17:57
very good decisin just wait have stilel more jaihind


Read more about அமெரிக்காவை இந்தியா அவமானப்படுத்துகிறது - அமெரிக்க அதிகாரி! [3221] | உலக செய்திகள் | செய்திகள் at www.inneram.com
பதில் | Reply with quote | Quote
 

உங்கள் கருத்து

கருத்துரைப்பது தனியுரிமை; பெற்ற சுதந்திரம் பேணுவது நம் கடமை! நாகரீகம் பேணுவது தமிழர் பண்பாடு; அநாகரீக, ஆபாச கருத்துகள் குணத்தின் வெளிப்பாடு!
தமிழ்/English(இந்நேரம்.காம் = iwwEram.kaam அம்மா=ammaa)