எஜமானி திட்டியதால் கோபமுற்ற பணிப்பெண் எஜமானியை கொன்ற அதிர்ச்சி சம்பவம் சிங்கப்பூரில் நடந்துள்ளது.
விட்ரியா என்ற இளம்பெண் சிங்கப்பூரில் வேலை செய்து வருகிறார்.இந்தோனேஷியாவைச் சார்ந்த இந்த பெண்ணின் வயது 19. இவர் கெக் என்ற 87 வயது
முதிய பெண்ணிடம் வேலை செய்து வந்தார். கெக் ஒரு விதவை ஆவார்.
விட்ரியா வேலையில் சேர்ந்து ஐந்து நாட்களே ஆன நிலையில் கெக் அவரை அடிக்கடி திட்டுவது அவருக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நேற்று (15.02.2012) கெக், விட்ரியாவை ”முட்டாள்” என திட்டியுள்ளார். இதனால் கோபமுற்ற விட்ரியா எஜமானியை அடித்துள்ளார். பின்னர் கெக்கின் கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார்.
விட்ரியாவை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவருக்கு தீர்ப்பு வரும் மார்ச் 7 ஆம் திகதி வழங்கப்படும். கெக் பாசமுள்ளவராக இருந்தாலும் அடிக்கடி கோபப்படுவார் என கெக்கின் மகனும் மருமகளும் தெரிவித்துள்ளனர்.
| < முந்தைய செய்தியை வாசிக்க... | அடுத்த செய்தியை வாசிக்க... > |
|---|
சிங்கப்பூர் - உயிரைப் பறித்த கோபம்
Comments
இப்பதிவுக்கான கருத்துகளின் RSS feed