பிஜி தீவில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இது 6.3 புள்ளியாக பதிவானது. பெரிய அலைகள் கடலில் ஏற்பட்ட போதிலும் சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை.
தென் பிசிபிக் கடலில் உள்ள பிஜி தீவில் இன்று பகல் 12.52 மணிக்கு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து கடலில் அலைகள் அதிக உயரத்தில் எழுந்தன. என்றாலும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது.
இந்த நிலநடுக்கத்தால் உயிர் இழப்போ, பொருட்சேதமோ எதுவும் ஏற்பட்டதாக இதுவரை தகவல் ஏதுமில்லை.
| < முந்தைய செய்தியை வாசிக்க... | அடுத்த செய்தியை வாசிக்க... > |
|---|
பிஜி தீவில் நிலநடுக்கம்!