இந்நேரம்.காம்

செய்தியாளர்கள்

தலையங்கம்

You are here: உலகம் யுரேனிய செறிவூட்டல் நேரடி ஒளிபரப்பு, பெட்ரோல் ஏற்றுமதிக்கு தடை - ஈரான் அதிரடி

யுரேனிய செறிவூட்டல் நேரடி ஒளிபரப்பு, பெட்ரோல் ஏற்றுமதிக்கு தடை - ஈரான் அதிரடி

தெஹ்ரான் : ஈரான் தெஹ்ரானில் அமைத்துள்ள அணு உலையில் யுரேனியம் செறிவூட்டும் பணிகளை செய்து வந்தது. ஈரான் அணுகுண்டு தயாரிக்க இதை பயன்படுத்துவதாகவும் இதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் கோரிய அமெரிக்காவின் கோரிக்கையை ஈரான் ஏற்காததால் அமெரிக்கா பல்வேறு பொருளாதார தடைகளை ஈரான் மேல் விதித்தது.

ஆனால் ஈரானோ அவை ஆக்கபூர்வமான முறையில் மின்சாரம் தயாரிக்கவே பயன்படுத்தப்படுவதாக தெரிவித்தது. இச்சூழலில் எந்த அணு உலையை அமெரிக்கா மூட சொன்னதோ அதே அணு உலையில் யுரேனியம் செறிவூட்டும் காட்சிகளையும் யுரேனிய ப்ளேட்டுகள் பொருத்தப்படும் காட்சியையும் ஈரான் அதிபர் அஹ்மது நிஜாத் உத்தரவின் பேரில் ஈரான் அரசு தொலைக்காட்சி நேரடியாக ஒளிபரப்பியது.

தன் உத்தரவை மீறியதோடு முகத்தில் கரி பூசும் விதமாக தன் வல்லமையை ஈரான் பறை சாற்றியது அமெரிக்காவுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. உலக நாடுகள் அனைத்தும் ஈரானை தனிமைப்படுத்த வேண்டும் என்று ஒபாமா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதற்கிடையில் ஈரான் அணு உலை உற்பத்தியை நிறுத்தாவிட்டால் ஈரானிடமிருந்து பெட்ரோல் இறக்குமதி செய்வதை நிறுத்துவோம் என்று அச்சுறுத்திய 6 ஐரோப்பிய நாடுகளுக்கு ஈரான் பெட்ரோல் ஏற்றுமதி செய்வதை நிறுத்தி அதிரடி காட்டியுள்ளது.

ஈரான் ஒரு அணு மின் நிலையம் அமைப்பதை எதிர்த்த அமெரிக்காவின் கோபத்தை கிளறும் விதமாக ஈரானின் மின் உற்பத்தியை நிவர்த்தி செய்ய இன்னும் 4 அணு உலை நிலையங்கள் அமைக்கப்படும் என்றும்  ஈரான் அதிபர் அஹ்மது நிஜாத் கூறியுள்ளார்.

 

Comments  

 
+7 # Logu 2012-02-16 11:35
ஒரு நட்டொட தன் மனம் தன் பெரியது மிக நன்ரு இரான்
பதில் | Reply with quote | Quote
 
 
+7 # HM. sadhiq 2012-02-16 11:55
அன்னா!!! நீ சிங்கம் டா...........
பதில் | Reply with quote | Quote
 
 
+2 # kasimedumannaru 2012-02-16 12:22
ஈரானை அச்சுறுத்தும் அமெரிக்கா, அதே அணுவுலையோடு ஆட்டம் போடும் இந்தியா, கூடங்குளம் அணுவுலையை நிறுவுவதற்கு வேண்டி... பல கோடிகள் செலவில் அடியாள்களை ஏற்பாடு செய்து, பொய் புரட்டுகளூடன் கூடிய விளம்பரங்களை வெளியிட்டும், போலி விஞ்ஞானியும் புதிய அரசியல்வாதியுமான அப்துல் கலாமை களத்தில் இறக்கி மக்களிடம் பேரம் பேசுவதற்காக பணத்தை வாரியிறைத்தும், தன்னெழுச்சியாக தன் வாழ்வுரிமைக்காகப் போராடும் மக்களை, கேவலமான மத வெறி நாய்களைத் தூண்டி விட்டு தாக்குதல் தொடுக்கும், இராசபக்சேவுக்கும் பாதபூஜை செய்யும் அடியாளான இந்திய அரசை, அமெரிக்காவால் தட்டிக் கேட்க துப்பில்லாமல் போனதன் மர்மம் தான் என்னவோ?
பதில் | Reply with quote | Quote
 
 
+7 # Mohamed Farook 2012-02-16 14:55
Excellent Iran.
பதில் | Reply with quote | Quote
 
 
+3 # smsamsudeen 2012-02-16 16:06
Excellent Iran.

Read more about யுரேனிய செறிவூட்டல் நேரடி ஒளிபரப்பு, பெட்ரோல் ஏற்றுமதிக்கு தடை - ஈரான் அதிரடி at www.inneram.com
பதில் | Reply with quote | Quote
 
 
+2 # Sawood 2012-02-16 18:51
Alhamdullilah... Allahu Akbar...
பதில் | Reply with quote | Quote
 
 
+2 # Sawood 2012-02-16 19:06
Alhamdullilah. Allahu Akbar
பதில் | Reply with quote | Quote
 
 
+2 # pkvmjailani 2012-02-16 19:08
allah akbar
பதில் | Reply with quote | Quote
 
 
+4 # mannargudykannan 2012-02-16 19:20
சில மத வெறி பிடித்த மேலை நாட்டு கைகூலிகள் அமெரிக்காவிடம் இருந்து காசை பெற்றுக்கொண்டு நமது நாட்டில் கட்டப்பெற்றிருக்கும் கூடங்குளம் அனூலையை திறக்க விடமாட்டேன் என்கிறார்கள். போலி சமாதான விரும்பிகள் வெள்ளையும் சொள்ளையும் தரித்துக்கொண்டு வந்து ஆயர்கள், ஆயாக்கள் என்று தங்களை கூறிக்கொண்டு மக்களை ஏமாற்றி, அமெரிக்காவிடம் காசை வாங்கிகொண்டு அவர்களுக்காக செயாலாற்றுகிரார்கள்.அந்த மத வெறி பிடித்த கைக்கூலிகளை நமது அரசு நன்றே அடையாளம் கண்டு கொண்டது. பாராட்டுக்கள். அந்நிய நாட்டு கைக்கூலிகளை ஈரானை போல் முறியடிப்போம். அனு உலையை திறந்து நமது நாட்டை முன்னேற்றுவோம். உலக ரவுடி அமெரிக்காவிற்கு மற்ற நாடுகள் முன்னேறுவதை கண்டாலே பிடிக்காது.
பதில் | Reply with quote | Quote
 
 
+1 # deen 2012-02-17 09:12
நாங்கள் மற்ற நாடுகள் (துரோகி இஸ்ரேல போல் அணுகுண்டை தயாரிக்காமல் )நாங்கள் எரிசக்தி மட்டுமே அனுலையை பயன்படுத்துவோம் என்பதை ஈரான் நிருபித்துள்ளது பாராட்டத்தக்கது நாம் அனைவரும் (உலகம் )அவர்கள் பின்னிர்போம்
பதில் | Reply with quote | Quote
 
 
+2 # nijar 2012-02-17 09:22
அல்ஹம்டுல்லிலாஹ் ... அல்லாஹு அக்பர் . ..
பதில் | Reply with quote | Quote
 
 
+1 # shahul 2012-02-17 22:14
conguratulations to iran go ahead god is your side
பதில் | Reply with quote | Quote
 
 
0 # Shabeel 2012-02-19 12:20
Best of Luck IRAN....
பதில் | Reply with quote | Quote
 
 
+1 # hameed 2012-02-20 06:02
நீங்க என்னடா இறக்குமதியை நிறுத்துறது ! நானே ஏற்றுமதியை நிறுத்துறேன் !!!!!!அஹமத் நிஜாத்
பதில் | Reply with quote | Quote
 
 
0 # Jafferkhan 2012-02-20 09:35
Aanmaiyulla prathamar!!!
பதில் | Reply with quote | Quote
 
 
0 # Osama 2012-02-20 14:51
Quoting hameed:
நீங்க என்னடா இறக்குமதியை நிறுத்துறது ! நானே ஏற்றுமதியை நிறுத்துறேன் !!!!!!அஹமத் நிஜாத்

Superb
பதில் | Reply with quote | Quote
 

உங்கள் கருத்து

கருத்துரைப்பது தனியுரிமை; பெற்ற சுதந்திரம் பேணுவது நம் கடமை! நாகரீகம் பேணுவது தமிழர் பண்பாடு; அநாகரீக, ஆபாச கருத்துகள் குணத்தின் வெளிப்பாடு!
தமிழ்/English(இந்நேரம்.காம் = iwwEram.kaam அம்மா=ammaa)