சீனாவில் அதி உயர பாலம்! Featured

பெய்ஜிங்(30 டிச 2016): உலகிலேயே உயரமான பாலம் ஒன்றை சீனா நிர்மாணித்துள்ளது.

1,854 அடி (565 மீட்டர்) உயர இந்த பாலம் வியாழனன்று (29-12-2016) வாகனப் போக்குவரத்திற்குத் திறந்து விடப்பட்டது.

பெய்பான்ஜியாங் பாலம் (Beipanjiang Bridge) எனப்படும் இப் பாலம் 4,396 அடி (1,341 மீட்டர்) நீளமுடையது. நாலு வழி சாலைகளுடன் அமைக்கப்பட்டுள்ள இந்தப் பிரம்மாண்ட பாலம் 146.7 மில்லியன் டாலர் செலவில் மூன்றே ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 10 ஆம் நாளே இதன் கட்டுமானப் பணிகள் முடிவுற்றுவிட்டாலும் கடந்த வியாழனன்றுதான் வாகனப் போக்குவரத்திற்காகத் திறந்துள்ளனர்.